குழந்தைகளுக்கும் பொருத்தமான அவித்த முட்டை சாதம் செய்வது எப்படி? | Boiled Eggs Rice Recipe !

#Cooking #Egg #rice
குழந்தைகளுக்கும் பொருத்தமான அவித்த முட்டை சாதம் செய்வது எப்படி? | Boiled Eggs Rice Recipe !

தேவையான பொருட்கள் :

  • முட்டை - ஒன்று
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - பாதியளவு
  • வேக வைத்த சாதம் - ஒன்றரை கப்
  • கரம் மசாலாத் தூள் - கால் டீஸ்பூன்
  • மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்
  • சீரகத் தூள் - அரை டீஸ்பூன்
  • கொத்த மல்லித்தழை - 2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 3 டீஸ்பூன்
  • கொத்த மல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கேற்ப

எப்படி செய்வது :

  1. வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கொள்ளவும்.
  2. அவித்த முட்டையில் பாதியைச் சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். 
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். அடுத்து அதில் கொத்த மல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
  4. இதனுடன் உப்பு, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  5. இப்போது வெட்டி வைத்திருக்கும் அவித்த முட்டையைச் சேர்த்து, மஞ்சள் கரு மசாலா வுடன் நன்றாகக் கலக்கும் வரை கிளறவும்.
  6. வேக வைத்த சாதம் சேர்த்துக் கலந்து எடுக்கவும்
  7. (ஃப்ரைடு ரைஸ் செய்வது போல நன்றாகக் கிளறி விட்டு எடுக்க வேண்டும்). இறுதியில் இன்னும் கொஞ்சம் கொத்த மல்லித்தழை தூவிக் கிளறவும்.